இந்திய அணிக்கு பா.ஜ.க தலைவர்களின் வாழ்த்துக்கள்: கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகம்!

சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடரை வென்ற இந்திய அணிக்கு தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி திரௌபதி முர்மு பாராட்டும் போது, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் இக்கோபையே மூன்று முறை வென்ற ஒரே அணி நாம் தான். இது இந்தியாவிற்கு கிடைத்த பெருமை.இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கும் நிர்வாகம் மற்றும் பயிற்சியாளர்களுக்கும் எனது பாராட்டுக்கள் எனக் கூறினார்.பிரதமர் மோடி பாராட்டும் போது, இந்த தொடர் முழுவதும் வீரர்கள் சிறப்பாக விளையாடினர். இந்தியாவுக்கு டிராபிக் கோப்பையை கொண்டு வந்த நமது கிரிக்கெட் அணியை நினைத்து பெருமைப்படுகிறேன். இந்திய அணிக்கு எனது வாழ்த்துக்கள் என்று கூறினார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறும் போது, நமது அனல் பறக்கும் ஆற்றலால் வீரர்கள் தேசத்தை பெருமைப்படுத்தி உள்ளனர். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்ற இந்திய அணிக்கு எனது வாழ்த்துக்கள். இது ஒரு வரலாற்று வெற்றியை உருவாக்கியுள்ளது.
முன்னாள் கிரிக்கெட்டர் சச்சின் டெண்டுல்கர் கூறும் போது, "சாம்பியன்ஸ் டிராபி வென்ற சாம்பியன்களுக்கு எனது வாழ்த்துக்கள்" என கூறினார். இந்தியாவின் இந்த வெற்றியை நாடு முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், தேசிய கொடியை அசைத்தும் தங்களது மகிழ்ச்சியை கொண்டாடினர்.