Kathir News
Begin typing your search above and press return to search.

ஜவுளித்துறையில் மிகப்பெரிய புரட்சி: மோடி அரசினால் நிகழ்ந்தது!

ஜவுளித்துறையில் மிகப்பெரிய புரட்சி: மோடி அரசினால் நிகழ்ந்தது!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  11 March 2025 9:34 PM IST

ஏற்றுமதி உள்ளிட்ட ஜவுளித் துறையின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிப்பதற்காக, ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா, ஒருங்கிணைந்த பதனப்படுத்துதல் மேம்பாட்டுத் திட்டம், உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டம், தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கம், சமர்த் – ஜவுளித் துறையில் திறன் மேம்பாட்டுத் திட்டம், பட்டு சமக்ரா-2, தேசிய கைத்தறி மேம்பாட்டுத் திட்டம் மற்றும் தேசிய கைவினைப் பொருட்கள் மேம்பாட்டுத் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படுகிறது.


ஜவுளித் தொழிலின் ஒட்டுமொத்த மதிப்புச் சங்கிலிக்கும் ஒருங்கிணைந்த பெரிய அளவிலான மற்றும் நவீன தொழில்துறை உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் நோக்கத்துடன், 2021-22 முதல் 2027-28 வரையிலான காலகட்டத்தில் 4,445 கோடி ரூபாய் திட்ட ஒதுக்கீட்டில் ஏழு பிரதமரின் மிகப் பெரிய ஒருங்கிணைந்த ஜவுளிப் பகுதி மற்றும் ஆயத்த ஆடை (பிஎம் மித்ரா) பூங்காக்களை அமைக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மித்ரா பூங்காக்களை அமைப்பதற்காக தமிழ்நாடு (விருதுநகர்), தெலங்கானா (வாரங்கல்), குஜராத் (நவ்சாரி), கர்நாடகா (கலபுராகி), மத்தியப் பிரதேசம் (தார்), உத்தரப் பிரதேசம் (லக்னோ) மற்றும் மகாராஷ்டிரா (அமராவதி) ஆகிய 7 இடங்களை அரசு இறுதி செய்துள்ளது. இந்தப் பூங்காக்கள் கட்டி முடிக்கப்பட்டால், ஒவ்வொரு பிரதமரின் மித்ரா பூங்காவும் சுமார் ரூ.10,000 கோடி முதலீட்டை ஈர்க்கும் என்றும், சுமார் 3 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.

பிரதமரின் மித்ரா பூங்கா திட்டத்தின் கீழ் இதுவரை ரூ.18,500 கோடிக்கும் அதிகமான முதலீட்டு சாத்தியக் கூறுகள் கொண்ட முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முன்மொழிவுகள் கையெழுத்திடப் பட்டுள்ளன பெறப்பட்டுள்ளன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News