சாதாரண மழைக்கே தத்தளித்த திருநெல்வேலி:அதிருப்தியில் மக்கள்!

2025 மார்ச் 11 இன்று முழுவதும் திருநெல்வேலியில் சாதாரண மழை பெய்தது இந்த சாதாரண மழைக்கே முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் அதிருப்தி அடைந்துள்ளனர்
திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்தது இதனால் அனைத்து அரசு துறை உயர் அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் சுகுமார் நேற்று ஆய்வுகளை மேற்கொண்டு பல அறிவுரைகளை வழங்கியிருந்தார் அது மட்டும் இன்றி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு மையமும் ஏற்படுத்தப்பட்டது எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள வேண்டிய தயார் நிலையில் இருப்பதாகவும் அறிவிப்புகள் வெளியானது
ஆனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கூறியபடி நடந்து கொள்ளவில்லை அதாவது வானிலை ஆய்வு மையம் அறிவித்தபடி திருநெல்வேலியில் அதிக கன மழை பெய்யவில்லை மிதமான மழையும் இடைவெளி விட்டு அவ்வப்போது மட்டுமே பெய்தது இருப்பினும் இந்த சாதாரண மழைக்கே திருநெல்வேலியின் முக்கிய சாலைகளிலும் தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகளையும் பாதசாரிகளையும் அவதிக்குள்ளாக்கியது
இதனால் மாநகரின் முக்கிய சாலைகளிலும் சந்திப்புகளிலும் தேங்கிய தண்ணீரை உடனடியாக வடிய வைப்பதற்கு மாநகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர் மழைக்காலம் ஏற்படுவதற்கு முன்பே முக்கிய சாலை ஓரங்களில் மழை நீர் ஓடைகளை தூர்வாருவதும் மழை நீர் ஓடைகள் இல்லாத இடங்களில் அவற்றை அமைப்பதுமே திட்டமிட்டு செய்யப்பட வேண்டிய முக்கிய நடவடிக்கைகள்
ஆனால் அவற்றை மாநகராட்சி செய்ய தவறிவிட்டது இதன் காரணமாகவே ஒவ்வொரு மழை காலத்திலும் மக்களின் துயரம் குறைந்தபாடில்லாமல் சென்று கொண்டே இருக்கிறது