மொரிஷியஸ் அதிபருக்கு மகாகும்பமேளா கங்கை தீர்த்தத்தை வழங்கிய பிரதமர் மோடி!

இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி மொரிசியஸ் சென்றிருந்தார் அங்கு மொரிசியஸ் அதிபர் தரம்பீர் கோகுலை அரசு மாளிகையில் பிரதமர் சந்தித்தார் மேலும் இந்தியா மொரிஷியஸ் இடையே சிறப்பான மற்றும் நெருங்கிய உறவை வலுப்படுத்துவதற்கு இருநாட்டு தலைவர்களும் தங்கள் கருத்துக்களை பரிமாறி கொண்டனர்
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி மொரிசியஸ் தேசிய தின கொண்டாட்டங்களில் இரண்டாவது முறையாக சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டது தனக்கு கிடைத்த கௌரவம் என குறிப்பிட்டிருந்தார் இதற்காக பிரதம நரேந்திர மோடி சிறப்பு அடையாளமாக அதிபருக்கும் அவரது மனைவிக்கும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் என்று அடையாள அட்டையை வழங்கியுள்ளார்
மேலும் அதிபர் தரம்பீருக்கு மகா கும்பமேளா கங்கை நீரையும் மக்கானாவையும் பரிசாக கொடுத்தனர் முன்னதாக சர் அனிருத் ஜுக்நாத் நினைவிடங்களுக்கு மரியாதை செலுத்தினார் பிரதமர் அப்பொழுது மொரிசியஸ் பிரதமரான நவீன் சந்திர ராம்கூலமும் பிரதமர் மோடியுடன் கலந்து கொண்டார் மேலும் இவர்களின் இந்த சந்திப்பில் மொரிசியஸின் முன்னேற்றம் மற்றும் இந்தியா மொரிசியஸ் உறவுகளுக்கு இடையேயான நெருக்கமான மற்றும் வலுவான அடித்தளத்தை உருவாக்குவதில் இரு நாட்டு தலைவர்களின் நீடித்த மரபுகளை பிரதமர் மோடி நினைவு கூர்ந்து பேசினார்