இனி இ-கேஒய்சி முறையில் அஞ்சல் அலுவலகங்களில் சேமிப்பு கணக்குகளை தொடங்கலாம்!

அஞ்சலகங்களில் காகிதத்தின் பயன்பாட்டை குறைப்பதற்காக இ-கேஒய்சி என்ற முறையில் சேமிப்பு கணக்கை தொடங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் ஜி.நடராஜன் தெரிவித்துள்ளார்
அதாவது வாடிக்கையாளர்கள் தங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி கைவிரல் ரேகை பதிவு மூலம் எளிதாக தங்கள் சேமிப்பு கணக்குகளை தொடங்கலாம் என்றும் முதற்கட்டமாக சென்னை நகர அஞ்சல் வட்டத்திற்கு உட்பட்ட பாரிமுனையில் பொது அஞ்சலகம் மயிலாப்பூர் செயிண்ட் தாமஸ் மவுண்ட் ஆவடி தாம்பரம் செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் அரக்கோணம் உள்ளிட்ட 20 இடங்களில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகங்களில் இந்த வசதி தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்
இந்த முறை மூலம் பொதுமக்கள் தங்கள் படிவம் பூர்த்தி செய்வதற்காக கவுண்டரின் நிற்பதற்கான நேரம் குறைக்கப்படும் அதுமட்டுமின்றி இந்த மாத இறுதிக்குள் 557 துணை அஞ்சல் நிலையங்களில் இந்த வசதி ஏற்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் இ-கேஒய்சி எனப்படுகின்ற பயோமெட்ரிக் முறை மூலம் பொதுமக்கள் தங்கள் சேமிப்பு கணக்கில் பணத்தை செலுத்தவும் முடியும் எடுக்க முடியும் இதுவரை சென்னை வட்டத்திற்குட்பட்ட அஞ்சல் அலுவலகங்களில் இந்த முறையில் 5,500 கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் தெரிவித்துள்ளார்