கூகுளை மிரட்டும் சீனாவின் அதிவேக கம்ப்யூட்டர்!
உலகிலேயே அதிவேகமானதாக கருதப்பட்ட கூகுளின் குவாண்டம் கம்ப்யூட்டரை விட அதிவேகமான ஜுச்சோங்ஷி - 3 என்ற கம்ப்யூட்டரை சீனா அறிமுகம் செய்துள்ளது.

உலகின் டிஜிட்டல் தொழில் நுட்பங்களை அறிமுகம் செய்வதில் அமெரிக்காவும் சீனாவும் போட்டிபோட்டு வருகின்றன. குறிப்பாக, அமெரிக்காவின் தொழில் நுட்பங்களுக்குப் போட்டியாக அதைவிட சிறப்பு வாய்ந்த பல கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்து உலகில் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு உதாரணமாய், கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவின் Chat GPT-ஐ பின்னுக்கு தள்ளி சீனாவின் DeepSeek AI முதலிடம் பிடித்து சாதனை படைத்தது.இந்த நிலையில் கூகுள் சூப்பர் கணினியைவிட, சிறப்பாகச் செயல்படும் சிறப்புக் கணினியை சீனா உருவாக்கியுள்ளது. சீனா அறிமுகம் செய்துள்ள 'ஜுச்சோங்ஷி - 3' என்ற குவாண்டம் கணினி, சூப்பர் கணினிகளின் தொழில்நுட்பத் துறையின் புரட்சியாகக் கருதப்படுகிறது.
கூகுளின் சூப்பர் கம்ப்யூட்டர் 10,000 ஆண்டுகளில் செய்யும் பணிகள் 200 நொடிகளில் செய்து சாதனை படைத்த நிலையில், தற்போது அதே பணியை சீனாவின் ஜுச்சோங்ஷி கம்ப்யூட்டர் வெறும் 14 வினாடிகளில் செய்து முடிக்கும் திறன் கொண்டது என சீனாவைச் சார்ந்த விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டு 67 கியூபிட் சூப்பர் கண்டெக்டிங் பிராசசரை பயன்படுத்தி உலகின் அதிவேக குவாண்டம் கணினியை கூகுள் நிறுவனம் கண்டுபிடித்தது. இந்நிலையில், சீன ஆராய்ச்சியாளர்கள் அந்த சாதனையை தற்போது முறியடித்துள்ளனர்.