தமிழ் படிப்போர் எண்ணிக்கை குறைவு: மத்திய அமைச்சர் கூறிய ஷாக் தகவல்!

லோக்சபாவில் மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான் நேற்று தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக பேசியதற்கு தி.மு.க எம்.பிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்காக தர்மேந்திர பிரதான் மன்னிப்பு கோரி, பேசியதை வாபஸ் பெற்றுக் கொண்டார். ராஜ்ய சபாவில் தர்மேந்திர பிரதான் பேசும் போது, பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் திட்டம் தொடர்பாக தலைமைச் செயலாளர் கடந்த ஆண்டு மத்திய அரசு கடிதம் எழுதினார். அதில் பி.எம்.ஸ்ரீ பள்ளிகளின் நிறுவ தமிழக அரசு ஆர்வமாக இருக்கிறது என கூறி இருந்தார். திருக்குறளை அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார்.
மாநில அரசுகளுடன் ஆலோசித்த பிறகு புதிய தேசிய கல்விக் கொள்கை உறுதி செய்யப்பட்டது. 1963ல் கொண்டுவரப்பட்ட முன்மொழிக்கும் கொள்கைக்கும், இப்பொழுது கொண்டுவரப்பட்ட மும்மொழிக் கொள்கைக்கும் வித்தியாசம் உள்ளது. ஐந்தாம் வகுப்பு வரை அந்த மாநிலத்தின் கொள்கை மொழியில் தான் கல்வி கற்பிக்க வேண்டும் என கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ளது.
தற்போது அரசு பள்ளிகளில் தமிழ் படிப்போரின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. தமிழ் மொழியை கற்க விரும்புகிறேன், இது அனைவருக்கும் பொதுவானது என பிரதமர் மோடி கூறியுள்ளார். தமிழர்களுக்கும், தமிழகத்திற்கும் அவர் விரோதமாக எதையும் செய்ய மாட்டார். திமுக எம்பிக்கள் கவலை கொள்ள தேவையில்லை.தமிழகத்தில் உள்ள 1500 பள்ளிகளில் 900 பள்ளிகளில் மும்மொழி கற்றுத் தரப்படுகிறது. மலையாளம் கன்னடம் ஆகிய மொழிகளும் மும்மொழிகளில் ஒன்றாக கற்பிக்கப்படும். ஹிந்தி சமஸ்கிருதம் தான் படிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இந்தியாவின் வரலாற்றை பற்றி பெருமிதம் கொள்ளாதவர்கள் திமுகவினர், அவர்கள் தனி உலகில் வாழலாம். தமிழக மக்களை இனி ஏமாற்ற முடியாது என அவர் பேசினார்.