பிரதமரின் உதவித்தொகை திட்டம்: கல்விக்கு முக்கியத்துவம் தரும் மோடி அரசு!

பிரதமரின் உதவித்தொகை திட்டம் 2006-07 இல் தொடங்கப்பட்டதில் இருந்து 2023-24 வரை, மத்திய ஆயுதக் காவல் படை மற்றும் மாநில காவல்துறைப் பணியாளர்களின் குழந்தைகள் மற்றும் விதவைகளுக்கு மொத்தம் 49,189 உதவித்தொகைகள் வழங்கப்பட்டுள்ளன. 2024-25 கல்வியாண்டுக்கான உதவித்தொகை தகுதிப் பட்டியல் மார்ச் 2025-க்குப் பிறகு உருவாக்கப்படும்.
மொத்த அனுமதிக்கப்பட்ட தொகையான ரூ 1,39,96,72,276 – ல், 2023-24 வரை ரூ 1,39,94,16,750 , வழங்கப்பட்டுள்ளது. பிரதமரின் உதவித்தொகை திட்டம், அதன் பயனாளிகளின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை நிதியுதவி வழங்குவதன் மூலம் கணிசமாக மேம்படுத்தியுள்ளது, இது தரமான கல்வியை அணுகுவதற்கான தடைகளை குறைக்கிறது.
மாணவர்கள் தங்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த அனுமதிக்கிறது, கல்வி செயல்திறனை மேம்படுத்துகிறது மற்றும் தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது. 2019-20 முதல், நக்சல்கள் அல்லது பயங்கரவாதத் தாக்குதல்களில் உயிரிழந்த மாநில காவல்துறைப் பணியாளர்களின் குழந்தைகளை உள்ளடக்கும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.