Kathir News
Begin typing your search above and press return to search.

மொரீசியஸ் நாட்டின் மிக உயரிய விருது: பெற்ற முதல் இந்திய பிரதமர் மோடி!

மொரீசியஸ் நாட்டின் மிக உயரிய விருது: பெற்ற முதல் இந்திய பிரதமர் மோடி!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  12 March 2025 4:12 PM

பாரம்பரியம் கலாச்சாரம், உணர்வில் வேரூன்றியுள்ள மொரீஷியஸ்க்கும் இந்தியாவுக்கும் ஆன பிணைப்பு ஆழமானது, வலுவானது என பிரதமர் மோடி கூறுகிறார். மொரிசியஸ் நாட்டின் 57வது தேசிய தின கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக புறப்பட்டார். அவரை மொரிசியஸ் பிரதமர் டாக்டர் நவீன்சந்திர ராம்கூலமை மோடியை வரவேற்றார். பிறகு அவர்கள் இருவரும் சர் ச சீவூசாகூர் ராம்கூலம் தாவரவியல் பூங்காவிற்கு சென்றனர். அங்கு இரு பிரதமர்களும் இணைந்து ஏக் பெட் மா கே நாம் பிரச்சாரத்தின் கீழ் ஒரு மரக்கன்று நட்டனர்.


மொரீஷியஸ் குடியரசின் தலைவர் தரம்பீர் கோகூலை அதிபர் மாளிகையில் பிரதமர் மோடி சந்தித்தார். பின்னர் மகா கும்பமேளா புனித நீரை அதிபருக்கு வழங்கினார். மொரீஸியசின் முதல் பெண்மணி பிருந்தா ராம்கூலம் சடேலிக்கு பிரசித்தி பெற்ற பனாரஸ் பட்டுப் புடவையை மோடி வழங்கினார்.

பிறகு மொரிஷியஸ் பிரதமர் நவீன் சந்திரா ராம் கூலம் நாட்டின் மிக உயரிய விருதான the Grand commander of the order of the star and key of the Indian Ocean விருதை பிரதமர் மோடிக்கு அறிவித்தார். இந்த விருதை பெரும் முதல் இந்திய பிரதமர் மோடி ஆவார். இது ஒரு நாடு பிரதமர் மோடிக்கு வழங்கும் 21 வது சர்வதேச விருது ஆகும். இது குறித்து பிரதமர் மோடி பேசும் போது, இந்தியா மற்றும் மொரிசியஸ் உறவுகளின் இனிமை அதிகரித்துள்ளது. எனக்கு வழங்கியுள்ள இந்த உயரிய விருதை நான் பணிவுடன் ஏற்றுக் கொள்கிறேன். மொரீஸியஸ் ஒரு கூட்டாளி நாடு மட்டுமல்ல, எங்களுக்கும் மொரீசியஸ் ஒரு குடும்பம் இந்த பிணைப்பு ஆழமானது மற்றும் வலுவானது மொரிசியஸ் இந்தியாவை வளரும் நாடுகளுடன் இணைக்கும் ஒரு பாலமாகும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News