மொரீஷியஸ் நாட்டின் மிக உயர்ந்த விருதைப் பெற்ற முதல் இந்தியரான பிரதமர் மோடி!
மொரீஷியஸ் நாட்டின் மிக உயர்ந்த விருதைப் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார்.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு தேசம் மொரீஷியஸ். அந்த நாட்டின் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் அழைப்பு விடுத்ததன்பேரில் அந்நாட்டின் 57-ஆவது தேசிய நாளில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க பிரதமர் மோடி 2 நாள்கள் அரசுமுறை பயணமாக மொரீஷியஸ் சென்றடைந்தார். மொரீஷியஸ் சென்ற பிரதமர் மோடிக்கு அங்கு பிரமாண்ட வரவேற்பளிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் தரம்பீர் கோகூல் மற்றும் அவரின் மனைவி பிருந்தா கோகூல் ஆகியோரைச் சந்தித்த பிரதமர் மோடி அவர்களுக்கு கும்பமேளா திரிவேணி சங்கமத்தின் நீரை பரிசளித்தார்.
முதல் முறையாக மொரீஷியஸ் சென்ற பிரதமர் மோடிக்கு கிராண்ட் கமாண்டர் ஆப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் அண்ட் கீ ஆஃப் தி இந்தியன் ஓசன் ஆகிய நாட்டின் உயரிய விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட உள்ளது.இந்த விருதைப் பெறும் முதல் இந்தியர் என்ற சிறப்பையும் பிரதமர் மோடி பெறவிருகிறார். மேலும், இது பிரதமர் மோடி பெறும் 21 வது சர்வதேச விருது இதுவாகும்.இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு தேசமான மோரீஷஸில் இந்தியா அளித்துள்ள நிதியுதவி மூலம் அமைக்கப்படவுள்ள உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.