ஆட்சியாளர்களுக்கு நல்ல புத்தியை கொடு தாயே: நுாதனமாக முறையில் ஆசிரியர்கள் வேண்டுகோள்!

By : Bharathi Latha
'எங்களை பணி நிரந்தரம் செய்ய ஆட்சியாளர்களுக்கு நல்ல புத்தி கொடு தாயே' என, ஆனைமலை மாசாணியம்மனுக்கு வேண்டுதல் சீட்டு' வைத்து, பகுதிநேர நுாதனமாக வேண்டுதல் வைத்துள்ளனர்.தமிழகம் முழுதும் அரசு பள்ளிகளில் பணி புரியும், 16,549 பகுதி நேர ஆசிரியர்களுக்கு, மாதம், 12,500 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில், பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் எனக் கூறியிருந்தது.
ஆனால், நிறைவேற்றப் படவில்லை.கோவை, ஆனை ஆசிரியர்கள்,மலை மாசாணியம்மன் கோவிலில், நீதிவேண்டி பக்தர்கள் பிரார்த்தனையை, வேண்டுதல் சீட்டில் எழுதி, அம்மன் பாதத்தில் வைத்து வழி பட்டால், இரு வாரங்களுக்குள் வேண்டுதல் நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது.
குறிப்பாக திமுக அரசாங்கம் ஆட்சிக்கு வந்து பல ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால் கொடுத்த வாக்குறுதி தற்போது வரை நிறைவேற்றாமல் இருப்பது ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
