Kathir News
Begin typing your search above and press return to search.

பரஸ்பர நம்பிக்கையை அதிபர் டிரம்ப் அன்றே எடுத்துக்காட்டினார்:பிரதமர் மோடி பெருமிதம்!

பரஸ்பர நம்பிக்கையை அதிபர் டிரம்ப் அன்றே எடுத்துக்காட்டினார்:பிரதமர் மோடி பெருமிதம்!
X

SushmithaBy : Sushmitha

  |  16 March 2025 10:57 PM IST

அமெரிக்க கம்ப்யூட்டர் விஞ்ஞானியும் எழுத்தாளருமான லெக்ஸ் பிரிட்மேன் பிரதமர் மோடியை பேட்டி எடுத்த வீடியோவை சமூக வலைதளத்தில் பிரதமர் பகிர்ந்துள்ளார் அதில் அமெரிக்க அதிபர் ட்ரம்பை நண்பராகவும் ஒரு தலைவராகவும் எப்படி பார்க்கிறீர்கள் என்று கேள்வி பிரதமரிடம் கேட்கப்பட்ட பொழுது பிரதமர் மோடி பகிர்ந்த விஷயங்கள் தற்போது உலக நாடுகள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது

அதாவது 2019 ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஹவுடி மோடி என்ற நிகழ்ச்சி நடைபெற்றது அந்த நிகழ்ச்சியில் மக்கள் கூட்டத்தோடு அதிபர் ட்ரம்பும் பார்வையாளர்களுடன் அமர்ந்திருந்தார் எனது உரை முடிந்த பிறகு நான் மேடையில் இருந்து கீழே இறங்கி வந்தேன் அப்பொழுது அவர் என்னுடன் சேர்ந்து அரங்கை வளம் வர வேண்டுமென கேட்டுக்கொணடேன் அதன்படியே டிரம்ப் என்னுடன் நடை போட்டார்

ஆனால் அமெரிக்கர்களின் வாழ்க்கையை பொருத்தவரையில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருக்கும் இடத்தில் அதிபர் ஒருவர் பாதுகாப்பின்றி நடந்து வருவது என்பது சாதாரணமான விஷயம் அல்ல அவர் தன்னுடைய சொந்த முடிவிலே பார்வையாளர்களோடு அமர்ந்திருந்தார் பிறகு என்னோடு தனியாக நடைபெற்றார் இது என் மீதும் என் தலைமையில் நடக்கும் நிகழ்ச்சி மீதும் அவர் வைத்த நம்பிக்கையாகும் இதுமட்டுமின்றி கடந்த ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது அப்பொழுதும் ட்ரம்பின் உறுதியை நான் கண்டேன் தற்போது நாட்டிற்காக சமரசம் இல்லாத அர்ப்பணிப்பை அவர் கொடுத்து வருகிறார் என கூறியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி

Next Story
கதிர் தொகுப்பு
Trending News