Kathir News
Begin typing your search above and press return to search.

சென்னையில் தயாராகும் முதல் ஹைட்ரஜன் ரெயில்-உலக நாடுகள் வரிசையில் முன்னேறும் இந்தியா!

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரெயில் தயாரிப்பு பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. அடுத்த மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது

சென்னையில் தயாராகும் முதல் ஹைட்ரஜன் ரெயில்-உலக நாடுகள் வரிசையில் முன்னேறும் இந்தியா!
X

KarthigaBy : Karthiga

  |  17 March 2025 12:59 PM

இந்தியாவில் மொத்தம் 19 ரயில்வே மண்டலங்கள் உள்ளது. இங்கிருந்து 13,000க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகிறது. உலக நாடுகளுக்கு இணையாக ரயில்வே துறையை மேம்படுத்தும் வகையில் ஹைட்ரஜன் ரயிலை உற்பத்தி செய்ய மத்திய ரயில்வே வாரியம் திட்டமிட்டது. அதன்படி கடந்த ஆண்டு அரசின் பட்ஜெட்டில் ஹைட்ரஜன் ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.மொத்தம் 35 ஹைட்ரஜன் ரயில்கள் தயாரிக்கப்பட்டு அதற்காக 2 ஆயிரத்து 300 கோடி ஒதுக்கப்பட்டது. சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் ஹைட்ரஜன் ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி கடந்த ஆண்டு தொடங்கியது. தற்போது ஹைட்ரஜன் ரயில் தயாரிப்பு பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

பெயிண்ட் அடிப்பது ஹைட்ரஜன் சிலிண்டர்கள் இணைப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் மட்டுமே நடந்து வருகிறது. விரைவில் பணிகள் முடிவடைகிறது. இந்த மாத இறுதிக்குள் பணிகள் முடிவடைந்து அடுத்த மாதம் சோதனை ஓட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட இருக்கிறது இருக்கிறது. இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயிலானது அரியானா மாநிலத்தில் உள்ள ஜிந்த்-சோனிபட் இடையே 89 கிலோமீட்டர் தூரத்திற்கு இயக்கப்பட உள்ளது. வழித்தடத்தில் தான் அடுத்த மாதம் சோதனை ஓட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட இருக்கிறது. இந்த வழித்தடத்தில் தான் அடுத்த மாதம் சோதனை ஓட்டமும் நடைபெறுகிறது. ரயிலில் 1200 hp திறன் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது.ஏப்ரல் மாத இறுதிக்குள் இந்த ரயில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது :-

பெரம்பூர் ஐ.சி.எப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ள ஹைட்ரஜன் ரயில் அதிக திறன் கொண்ட ரயிலாகும் மற்ற நாடுகளில் அதிகபட்சம் ஐந்து பெட்டிகள் வரை இருக்கும்.ஆனால் முதன்முறையாக இந்தியாவில் 10 பெட்டிகள் கொண்ட ஹைட்ரஜன் ரயில் சேவை இயக்கப்பட இருக்கிறது.இது உலக நாடுகளுக்கே ஒரு முன்னுதாரணம்ஒவ்வொரு ரயிலும் ரூபாய் 80 கோடி செலவில் தயாரிக்கப்படும். கார்பன் உமிழ்வால் இயற்கை மாசடைவதை தடுக்கும் வகையில் மலைப்பகுதிகளில் ஹைட்ரஜன் ரயில் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் தான் முதல் ரயில் வடக்கு ரயில்வேயில் இயக்கப்பட உள்ளது. ஹைட்ரஜன் ரயில் தயாரிப்பு பணி 80 சதவீதம் முடிவடைந்துள்ளது. விரைவில் சோதனை ஓட்டத்திற்கு அனுப்பி வைக்கப்படும். 2030-ம் ஆண்டுக்குள் இந்திய ரயில்வேயில் கார்பன் உமிழ்நெல்வை பூஜ்ஜியமாக மாற்றும் முயற்சியில் இந்த ஹைட்ரஜன் ரயில் முன்னோடியாக இருக்கும் .இவ்வாறு அவர் கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News