Kathir News
Begin typing your search above and press return to search.

விண்வெளித்துறையில் அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி அசுர வேகத்தில் வளர்ச்சியை உருவாக்கி வரும் மத்திய அரசு!

ஜப்பான் நாட்டு விண்வெளி துறையுடன் இணைந்து செயல்படுத்த இருக்கும் இந்தியாவின் லட்சிய பயணமான சந்திரன் 5 திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என்று இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் கூறினார்.

விண்வெளித்துறையில் அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி அசுர வேகத்தில் வளர்ச்சியை உருவாக்கி வரும் மத்திய அரசு!
X

KarthigaBy : Karthiga

  |  19 March 2025 7:00 AM

இந்தியாவின் லட்சிய பயணமான சந்திரயான் 5 பணிக்கு மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது. ஜப்பானுடன் இணைந்து இந்தப் பணியை செய்ய இருக்கிறோம். இந்தப் பயணமானது குறிப்பிடத்தக்களவு பெரிய ரோவரை சுமந்து செல்கிறது. சந்திரயான்-5 மூன்று திட்டத்தில் பயன்படுத்தப்பட்ட 25 கிலோ எடையுள்ள பிரக்யான் ரோவரை விட அதிகமாக இந்த திட்டத்தில் 250 கிலோ எடையிலான ரோவர் பயன்படுத்தப்படுகிறது. சந்திராயன் தொடர் திட்டங்கள் இந்தியாவின் நிலவாய்வு முயற்சிகளுக்கு மிக முக்கியமானது.

முதல் திட்டமான சந்திரயான் 1 கடந்த ஆண்டு 2008 ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட்டது.இந்த திட்டத்தின் மூலம் சந்திரனின் வேதியியல், கனிமவியல் மற்றும் புகைப்பட- புவியியல் வரைபடம் பெறப்பட்டதுடன் பல்வேறு முக்கிய ஆராய்ச்சிகளும் செய்யப்படுத்தப்பட்டு பலதரவுகள் பெறப்பட்டன. சந்திரயான் 2 பணி கடந்த 2019 ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டது. 98 சதவீதம் வெற்றி அடைந்தது. இருந்தாலும் லேண்டர் அதன் இறுதிக் கட்டத்தில் தோல்வியடைந்தது. இருப்பினும் உள் உயர் தெளிவுத்திறன் கொண்ட கேமரா நூற்றுக்கணக்கான படங்களைத் தொடர்ந்து அனுப்பி வருகிறது.

சந்திரயான்-3 பணியில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி விக்ரம் லேண்டர். நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது.இது உலகிற்கு இந்தியாவின் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கும் திறன்களை நிரூபித்தது. தற்போது சந்திரயான் 4 திட்டத்திற்கு இஸ்ரோ தயாராகி வருகிறது. நிலவு மாதிரிகளை சேகரித்து பூமிக்கு கொண்டுவரும் இலக்குடன் இந்த திட்டம் அமைந்துள்ளது. சந்திரயான் 5 திட்டம் வருகிறது 2027 ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் மனித விண்வெளிப் பயணத்திட்டமான ககன்யான் மற்றும் நாட்டின் சொந்த விண்கலநிலையம் ஆன பாரதிய விண்வெளி நிலையத்தை நிறுவும் திட்டங்கள் உள்ளிட்டவை இஸ்ரோவின் எதிர்கால திட்டங்கள் ஆகும். சந்திரயான்-5 திட்டத்திற்கு தற்போது மத்திய அரசின் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் ஜப்பானுடன் இணைந்து இந்தியா தனது நிலவு ஆய்வை வலுப்படுத்த உள்ளது. இது உலகளாவிய விண்வெளி ஆராய்ச்சியில் தனது பங்கை விரிவு படுத்துவதற்கான மற்றொரு படியாகும்.இவ்வாறு இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News