Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் தமிழகத்திற்கு மத்திய அரசு கொடுத்தது என்னென்ன?லிஸ்ட் போட்ட நிர்மலா சீதாராமன்!

பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் தமிழகத்திற்கு மத்திய அரசு கொடுத்தது என்னென்ன?லிஸ்ட் போட்ட நிர்மலா சீதாராமன்!
X

SushmithaBy : Sushmitha

  |  23 March 2025 4:00 AM

சென்னை சிட்டிசன் ஃபோரம் அமைப்பு சார்பில் மத்திய பட்ஜெட் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை என குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு அதிக நிதியையும் திட்டங்களும் வழங்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்

மேலும் கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டில்:

ஜன் தன் திட்டம்:1.7 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன இதில் 58% பெண்களின் கணக்குகள்

பிரதமரின் வீட்டு வசதித் திட்டம்:12 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளன

தூய்மை பாரத திட்டம்:59 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமப்புற வீடுகளில் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன

ஜல் ஜீவன் இயக்கம்:89 லட்சம் கிராமப்புற வீடுகளுக்கு குழாய் வழி குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன

பிரதமரின் உஜ்வாலா திட்டம்:41 லட்சத்திற்கும் மேற்பட்ட சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன

ஆயுஷ்மான் பாரத் திட்டம்:ஆண்டுக்கு ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் என்ற விகிதத்தில் 79 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு சுகாதார காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது

தமிழ்நாட்டில் கடந்த பத்தாண்டுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள் உள்கட்டமைப்பு பணிகள்:

4,100 கி.மீ.க்கும் அதிகமான தேசிய நெடுஞ்சாலைகள் கட்டப்பட்டுள்ளன

2014 முதல் 1,303 கி.மீ.க்கும் அதிகமான புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன மேலும் சுமார் 2,242 கி.மீ. ரயில் வலையமைப்பு மின்மயமாக்கப்பட்டுள்ளது தமிழ்நாட்டில் 94% ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன

54 கி.மீ.க்கும் அதிகமான தொலைவுக்கு சென்னை மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகின்றன

உதான் திட்டத்தின் கீழ்,சேலம் விமான நிலையம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது,அதே நேரத்தில் நெய்வேலி மற்றும் வேலூரில் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன

மேலும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மாநிலங்களுக்கு மூலதன செலவினத்திற்கான சிறப்பு உதவித் திட்டத்தின் மூலம் மூலதனச் செலவில் மாநில அரசுகளின் முதலீட்டை ஆதரித்துள்ளது இதில் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு 50 ஆண்டு வட்டி இல்லாத கடன்கள் வழங்கப்படுகின்றன

இந்த நிதியுதவி நிதி ஆணையத்தின் பரிந்துரைகள் இல்லாமலேயே வழங்கப்பட்டுள்ளன

2020-21 மற்றும் 2023-24 க்கு கலக்கட்டத்தில் தமிழ்நாட்டிற்கு ரூ.14,900 கோடிக்கு மேல் வட்டி இல்லாகடன் வழங்கப்பட்டுள்ளது

Next Story
கதிர் தொகுப்பு
Trending News