பிரதமர் மோடி அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டம்: மாரடைப்பு, பக்கவாதம் சிகிச்சை சேர்க்கப்படுமா?

''மாரடைப்பு, பக்கவாதம் நோய்களுக்கான சிகிச்சையை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் சேர்க்க வேண்டும்'' என ராஜ்யசபா ம.ஜ.த., உறுப்பினர் தேவகவுடா வேண்டுகோள் விடுத்தார்.ராஜ்யசபாவில் பட்ஜெட் மீதான விவாதத்தில், அவர் பேசியதாவது: இந்தியாவில் மாரடைப்பு, பக்க வாதத்தால் இறப்போர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. ஆண்டு தோறும் லட்சக்கணக்கானோர் உயிர் இழக்கின்றனர்.

இதில் 30 சதவீதம் பேர் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது வருத்தம் அளிக்கிறது. மாரடைப்பு, பக்கவாத சிகிச்சைகளை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் சேர்க்க வேண்டும். உயிர் காக்கும் மருந்துகளை இத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். இத்திட்டம், நல்ல திட்டமாகும். இந்தியாவின் 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட மக்கள், தரமான சிகிச்சை பெறுகின்றனர்.
இத்திட்டத்தை 2018-ல் பிரதமர் நரேந்திர மோடி துவக்கினார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம் இதைத் தொடங்கி வைத்த பிறகு இந்தியாவில் உள்ள அனைவரிடமும் ஆயுஷ்மான் திட்டம் பெருமளவில் வரவேற்பை பெற்றது. அந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக மாரடைப்பு, பக்கவாத போன்ற சிகிச்சை மருந்துகளும் இதில் உள்ளடக்கம் செய்யப்பட்டால் ஏழை எளிய மக்கள் பெரும் அளவில் பயனடைவார்கள் என்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை ஒன்று எழப்பட்டிருக்கிறது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் விரைவில் தீர்வு காணும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டு இருக்கிறது.