போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் தொடரும்:அமித் ஷா உறுதி!

மத்திய அரசு போதை பொருள் நடமாட்டத்திற்கு எதிரான நடவடிக்கைகளை கடுமையாக எடுக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார் அதுமட்டுமின்றி போதிப்பொருள் இல்லாத இந்தியா உருவாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்
இதனைத் தொடர்ந்து டெல்லியில் ரூபாய் 27.4 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் கைப்பற்றி ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளதாக எக்ஸ் வலையதளபக்கத்தில் தெரிவித்துள்ளார்
அதாவது போதைப்பொருளுக்கு எதிரான பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் சமரசமற்ற தன்மைக்கு இணங்க, டெல்லி தேசிய தலைநகரில் ஒரு பெரிய போதைப்பொருள் கட்டமைப்பு கும்பல் கண்டுபிடிக்கப்பட்டது தேசிய போதைப்பொருள் தடுப்பு அமைப்பும் டெல்லி காவல்துறையும் இணைந்து அந்த கும்பலைப் பிடித்து ரூபாய் 27.4 கோடி மதிப்புள்ள மெத்தாம்பேட்டமைன்,எம்டிஎம்ஏ,கோகோயின் ஆகியவற்றை மீட்டு ஐந்து பேரைக் கைது செய்துள்ளனர் போதைப் பொருள் தடுப்பு அமைப்பு மற்றும் தில்லி காவல்துறையையும் நான் பாராட்டுகிறேன் என்று கூறியுள்ளார்