சென்னை,கோவையில் அமையவுள்ள மல்டிமாடல் லாஜிஸ்டிக்ஸ் பூங்காக்கள்:நாடாளுமன்றத்தில் நிதின் கட்கரி!

புதுடெல்லியில் நடந்து வருகின்ற நாடாளுமன்ற மாநிலங்கள் அவை கூட்டத்தொடரில் மதிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தமிழகத்தில் சென்னை மற்றும் கோவையில் லாஜிஸ்டிக் பூங்காக்கள் அமைக்க உள்ளதாக கூறியுள்ளார்
அதாவது நாடு முழுவதும் பொது துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் மல்டிமாடல் லாஜிஸ்டிக் பூங்காக்களை அமைக்க 35 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது அவற்றில் சென்னை மற்றும் கோவையிலும் அமைக்கப்பட உள்ளன இவற்றை மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைகள் லாஜிஸ்டிக் மேனேஜ்மென்ட் லிமிடெட் உட்பட பல நிறுவனங்கள் மேற்கொள்ளகிறது
சென்னை மற்றும் கோவையில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் தேசிய நெடுஞ்சாலை சரக்கு போக்குவரத்து மேலாண்மை நிறுவனம் ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் சென்னை துறைமுக ஆணையம் ஆகியவற்றை உள்ளடக்கி 641.92 கோடி ரூபாய் மதிப்பில் அமைகிறது இந்த மல்டி மாடல் லாஜிஸ்டிக் பூங்காக்கள்
மேலும் இந்த திட்டத்தின் செயல் திறனை கண்காணித்தல் மற்றும் மதிப்பீடு செய்தல் ஆகியவற்றை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு சொந்தமான தேசிய நெடுஞ்சாலைகள் சரக்கு போக்குவரத்து மேலாண்மை நிறுவனத்தால் செய்யப்படும் என்று கூறியுள்ளார்