தாய்லாந்தை அடைந்த பிரதமர் மோடி! இதயங்களையும்,பாரம்பரியங்களையும் இணைக்கும் பாலம் ராமாயணம்!

பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் அரசுமுறை பயணமாக தாய்லாந்து சென்றுள்ள நிலையில் தாய்லாந்தின் பாங்காக் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது அடுத்து அங்கு பிரதமரை காண திரண்டிருந்த தாய்லாந்து வாழ் இந்தியர்கள் இந்திய தேசிய கொடிகளை கையில் ஏந்தி உற்சாகமாக பிரதமரை வரவேற்று பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்தனர்
இதனை அடுத்து வேத மந்திரங்கள் ஓதி பாரம்பரிய நடனங்களை ஆடி தாய்லாந்து வாழ் இந்தியர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார் பிறகு தலைநகர் பாங்காக்கில் தாய்லாந்து நாட்டின் கலைஞர்கள் நிகழ்த்திய ராமாயண நாட்டிய நாடகத்தையும் பிரதமர் நரேந்திர மோடி கண்டு ரசித்தார்
அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த பிரதமர் தாய்லாந்தின் ராமாயணம் ராமகியெனை காணும் வாய்ப்பு கிடைத்தது. இது இந்தியா மற்றும் தாய்லாந்து இடையிலான பண்டைய கலாச்சார,நாகரிக உறவுகளை அழகாக வெளிப்படுத்திய ஒரு சிறப்பான அனுபவமாக இருந்தது ராமாயணம் இன்று வரை ஆசியாவின் பல பகுதிகளில் உள்ள இதயங்களையும் பாரம்பரியங்களையும் இணைக்கும் பாலமாக செயல்பட்டு வருவது மகத்தானது என குறிப்பிட்டுள்ளார்