திருவண்ணாமலையில் சத்துணவு முட்டை கேட்ட மாணவனை தாக்கிய சத்துணவு ஊழியர்கள்!

தமிழகத்தின் தொடர்ந்து பல பரபரப்பான சம்பவங்களும் கொலை குற்றங்களும் தாக்குதல்களும் நடந்து வருகிற நிலையில் அரசு பள்ளியில் சத்துணவில் வழங்கப்படுகின்ற முட்டை பற்றி கேள்வி எழுப்பிய மாணவனை ஊழியர் தாக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள செங்குணம் வெள்ளைமேடு பகுதியில் செயல்பட்டு வருகின்ற அரசு துவக்கப்பள்ளியில் சத்துணவு வழங்கிய பொழுது ஐந்தாம் படிக்கும் மாணவனுக்கு முட்டை கொடுக்கப்படவில்லை அது குறித்து மாணவன் கேட்டதற்கு பணியாளர்கள் இல்லை என மறுத்துள்ளனர் ஆனால் சமையல் கூடத்தில் முட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அந்த சிறுவன் கண்டுபிடித்ததை அடுத்து கேள்வி எழுப்பியதற்கு அங்கிருந்த சமையலர் மற்றும் உதவியாளர் கோபத்தில் வகுப்பறைக்குள் புகுந்து மாணவனை துடைப்பத்தல் தாக்கியுள்ளனர்
மாணவன் கதறி ஓடி போதும் ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்களால் அவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை ஆனால் அங்கிருந்தவர்கள் மொபைல் போனில் நடந்தவற்றை படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர் இது தற்போது செய்திகளில் பரபரப்பை ஏற்படுத்தியதோடு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை கிளம்பி உள்ளது சமூக வலைதளத்தில் அச்சிறுவன் கதறிய வீடியோ பெரும் வைரலானதை அpடுத்து சமையலர் மற்றும் உதவியாளர் இருவரையும் சஸ்பெண்ட் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்