பிரதமர் மோடியை உற்சாகமாக வரைவேற்ற இலங்கை:உயரிய விருது முதல் கிரிக்கெட் அணி சந்திப்பு வரை!

இலங்கை சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடியை கொழும்பில் உள்ள இந்திய சமூகத்தினர் உற்சாக வரவேற்பு கொடுத்து வரவேற்றனர் பிறகு இலங்கையின் ஜனாதிபதி திசாநாயக்க அவர்களால் இன்றைய தினம் 'இலங்கை மித்ர விபூஷண்' என்ற இலங்கையின் உயரிய விருது பிரதம நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது
பிறகு இந்தியாவை பூர்வீகமாக கொண்ட தமிழ் மக்களுடன் சுமூகமான சந்திப்பை நடத்திய பிரதமர் நரேந்திர மோடி இச்சமூகத்தினர் 200 ஆண்டுகளுக்கும் மேலாக இரு நாடுகளுக்குமான ஒரு வாழும் உறவுப் பாலமாக திகழ்கின்றனர் இலங்கை அரசாங்கத்துடனான ஒத்துழைப்புடன் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட தமிழ் மக்களுக்காக 10000 வீடுகள், சுகாதார வசதிகள், புனித சீதை அம்மன் ஆலயம் ஆகியவற்றின் நிர்மாணம் மற்றும் ஏனைய சமூக அபிவிருத்தி திட்டங்களுக்காக இந்தியா ஆதரவு வழங்கும் என்று தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்
மேலும் கொழும்பில் உள்ள இந்திய அமைதி படையினரின் நினைவு இடத்திற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பிரதமர்
1996 உலக கிண்ணத்தை வெற்றி பெற்ற அன்றைய இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களுடன் பிரதம நரேந்திர மோடி கலந்துரையாடினார்