சைபர் பாதுகாப்பிற்கு இந்தியாவின் முதல் டிஜிட்டல் அறிக்கை!சைபர் குற்றங்களுக்கு வேட்டு வைத்த மத்திய அரசு!

வங்கி,நிதி சேவைகள் மற்றும் காப்பீட்டு துறைகளில் சைபர் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளின் ஒரு முயற்சியாக, சர்வதேச சைபர் பாதுகாப்பு நிறுவனத்துடன் இணைந்து டிஜிட்டல் அச்சுறுத்தல் தொடர்பான அறிக்கையை அறிமுகப்படுத்த இந்தியா நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது
இந்த அறிக்கையை நிதி அமைச்சகத்தின் நிதி சேவைகள் துறை செயலாளர் எம் நாகராஜு,மின்னணு தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் எஸ் கிருஷ்ணன்,கணினி அவசர கால மீட்புக்குழுவின் தலைமை இயக்குநர் டாக்டர் சஞ்சய் பாஹல் சிசா அமைப்பின் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான தர்ஷன் சாந்தமூர்த்தி ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்
மேலும் இந்த அறிக்கை வங்கி,நிதி சேவைகள்,காப்பீடு ஆகிய துறைகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய துறைகளாக இருப்பதால்,இணைய வழி தாக்குதல்கள் கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்றும்,இணையவழி அச்சுறுத்தல்களை சமாளிக்க பல்வேறு நிறுவனங்கள் ஒருங்கிணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது