அமலுக்கு வந்தது வக்பு வாரிய திருத்தச் சட்டம்!

மத்திய அரசு வக்பு வாரியத்தை சீரமைப்பதற்காக கொண்டு வந்த வக்பு திருத்த சட்ட மசோதாவை கூட்டு பார்லிமென்ட்ரி குழு ஆய்வு செய்து அறிக்கை வழங்கிய பிறகு சமீபத்தில் இரு அவைகளிலும் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றியது
இதனை அடுத்து ஜனாதிபதி திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்த பிறகு இந்த சட்டம் இறுதிசெய்யப்பட்டு தற்போது நாடு முழுவதும் இந்த சட்டம் அமலுக்கு வந்தது என மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது 8 ஏப்ரல் 2025 முதல் வக்பு வாரிய திருத்த சட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. ஆனால் இந்த சட்டத்தை எதிர்த்து திமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்வதாக அறிவித்துள்ளது மேலும் இன்றுவரை 10 மனுக்கள் இது குறித்து தாக்கல் செய்யப்பட்டுள்ளது
அதே நேரத்தில் இந்த வழக்குகள் குறித்து எதிர்பார்த்து இருந்த மத்திய அரசு இன்று ஏப்ள எட்டாம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் கோவியட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது இதனால் இந்த சட்டத்தை எதிர்க்கும் அணுக்கள் மீதான விசாரணை வருகின்ற ஏப்ரல் 15 ஆம் தேதி நடக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது