அமெரிக்காவின் வரி விதிப்பு இந்தியாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாதற்கு காரணம் உள்நாட்டு தேவைகளே:நிர்மலா சீதாராமன்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார் அதன்படி லண்டன் நகரில் பிரிட்டனுடன் அமைச்சர்களுடன் பொருளாதார மற்றும் நிதி சார்ந்த பேச்சில் கலந்து கொண்டுள்ளார்
அதாவது லண்டனில் உள்ள இந்திய தூதருக்கு அலுவலகத்தில் வருகின்ற 2047 இல் வளர்ந்த பொருளாதர நாடாக மாற இந்தியா எதிர்கொள்ளும் சவால்களும் வாய்ப்புகளும் என்ற தலைப்பில் பேசிய நிர்மலா சீதாராமன் உலகில் வேகமாக வளர்ந்து வருகின்ற பொருளாதர நாடு என்ற பெருமையை பெற்றுள்ள இந்தியா அந்த பெயரை தக்க வைத்துக் கொள்வதற்காக கடுமையாக பாடுபடுகிறது
எங்கள் வளர்ச்சி உள்நாட்டு நுகர்வு அடிப்படையிலானது மேலும் எங்கள் நாட்டில் உலக தரத்திலான பொருட்களுக்கு எப்பொழுதுமே தேவை உள்ளது அதன்படி இந்தியாவின் நீண்ட கால பங்குதார நாடாக உள்ள அமெரிக்கா தற்போது மேற்கொண்டுள்ள வரி விதிப்புகள் இந்தியாவில் பெரிய பாதிப்பு இல்லாத அளவிற்கு தற்காத்துக் கொள்வது எங்களின் உள்நாட்டு தேவையே
இந்தியாவின் வளமான உள்நாட்டு தேவையே வெளிநாட்டு நேரடி முதலீடு மற்றும் சர்வதேச உற்பத்தி வினியோக உள்நாட்டு சந்தையையும் இந்தியாவிலிருந்து ஏற்றுமதியையும் கவர்கிறது என்று பேசியுள்ளார்