தனது முதல் வந்தே பாரத் ரயிலை பெறப்போகும் காஷ்மீர்!சுற்றுலா பயணிகளுக்கு நல்ல அனுபவம்!

சமீபத்தில் கட்டி முடிக்கப்பட்ட உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் இணைப்பில் கத்ரா-ஸ்ரீநகர் சேவை தொடங்கப்படுவதன் மூலம், இந்த மாத இறுதியில் காஷ்மீர் அதன் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸைப் பெற உள்ளது
முதல் முறையாக காஷ்மீர் வரையிலான வந்தே பாரத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளார் தற்போது,காஷ்மீரில் ரயில் சேவைகள் பாரமுல்லா மற்றும் சங்கல்டன் இடையே மட்டுமே இயங்குகின்றன, நீண்ட தூர ரயில்கள் கத்ராவில் முடிவடைகின்றன
புதிய வந்தே பாரத் திட்டம் இந்த இடைவெளியை நிரப்பும்,கத்ராவிலிருந்து ஸ்ரீநகர்/பாரமுல்லா வரை இயங்கும் இதன் மூலம் பயணிகள் முதல் முறையாக காஷ்மீருக்கு நேரடியாக ரயிலில் பயணிக்க முடியும் இந்த ரயில் இணைப்பு 272 கி.மீ நீளம் கொண்டது
இந்த ரயில் உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் இணைப்பில் இயக்கப்படும் இது ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா நிலையத்திற்கும் ஸ்ரீநகர் நிலையத்திற்கும் இடையே 150 கி.மீ.க்கும் அதிகமான தூரத்தை சுமார் 2 மணி நேரம் 30 நிமிடங்களில் கடக்கும் இந்த வழித்தடத்தின் ஒரு தனித்துவமான அம்சம் இந்தியாவின் பொறியியல் வலிமையின் அடையாளமாக உலகின் மிக உயரமான ரயில்வே பாலமான செனாப் பாலமும் இந்த ரயில் பயணத்தில் உள்ளது பாலத்தை ஆய்வு செய்த பிறகு பிரதமர் கத்ராவுக்குச் சென்று ரயில் சேவையை அர்ப்பணித்து பொதுக் கூட்டத்தில் பேச உள்ளார்