வளமும் ஆரோக்கியமும் பெருகட்டும்:தமிழில் வாழ்த்து தெரிவித்த பிரதமர்!

தமிழ் மாதத்தில் சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டாக ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்பட்டு வருகிறது இதனை உலகம் முழுவதும் உள்ள தமிழ் பேசும் மக்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர் இதற்கு பிரதமர் நரேந்திர மோடி தமிழிலே தனது சமூக வலைதள பக்கத்தில் தமிழ் மக்களுக்கு தமிழ் புத்தாண்டின் வாழ்த்தை தெரிவித்துள்ளார்
அதாவது மகிழ்ச்சியான தமிழ் புத்தாண்டு தினத்தை ஒட்டி அன்பான வாழ்த்துக்கள் இந்த புத்தாண்டு வளத்தையும் நல்ல ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டு வரட்டும் அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடன் ஆசீர்வதிக்கப்படட்டும் என தெரிவித்துள்ளார்
பிரதமரை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்தில் உள்ள சகோதர சகோதரிகளுக்கு தமிழ் புத்தாண்டு திருநாளில் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் புனிதமான சடங்குகளுடன் ஒரு நம்பிக்கையோடு புத்தாண்டை நாம் வரவேற்கும் போது இந்த நாள் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம் மற்றும் செழிப்புக்கான அனைத்து நன்மைகளையும் அளிக்கட்டும் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்
மேலும் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினரான அண்ணாமலை உலகெங்கும் உள்ள தமிழ் மக்களுக்கு, இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்
இந்த புத்தாண்டு, அனைவருக்கும் நல் ஆரோக்கியத்தையும்,மகிழ்ச்சியையும்,அளிக்கும் ஆண்டாகவும்,அனைவரின் வாழ்விலும்,அன்பும்,அமைதியும் பெருகும் ஆண்டாகவும்,புதிய தொடக்கத்தையும் நம்பிக்கையையும் அளிக்கும் ஆண்டாகவும் அமையட்டும் இனிய விசுவாவசு தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்