Kathir News
Begin typing your search above and press return to search.

இறக்குமதியை நம்பியிருப்பதைக் குறைத்த இந்தியாவில் தயாரிப்போம் திட்டம்:மருந்துத்துறையில் தற்சார்பு பெரும் இந்தியா!

இறக்குமதியை நம்பியிருப்பதைக் குறைத்த இந்தியாவில் தயாரிப்போம் திட்டம்:மருந்துத்துறையில் தற்சார்பு பெரும் இந்தியா!
X

SushmithaBy : Sushmitha

  |  14 April 2025 11:41 AM IST

ரசாயனம்,உரங்கள் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள மருந்தியல் துறை,மலிவு விலையில் மருந்துகள் கிடைப்பது,ஆராய்ச்சி - மேம்பாடு, இத்துறையில் சர்வதேச விவகாரங்கள் தொடர்பான விஷயங்களுக்கு பொறுப்பாகும். நியாயமான விலையில் தரமான மருந்துகளை வழங்கும் உலகின் மிகப்பெரிய நாடாக இந்தியாவை மாற்றும் பார்வையுடன், துறையின் முயற்சிகள் அமைந்துள்ளன உள்நாட்டு, உலகளாவிய சந்தைகளுக்கு உயர் தரத்தில், செலவு குறைந்த மருந்துகளை தயாரித்து வழங்குவதில் இந்திய மருந்துத் தொழில் தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கிறது

கடந்த ஆறு முதல் ஏழு ஆண்டுகளாக யுனிசெப்பின் மிகப்பெரிய தடுப்பூசி விநியோக நாடாக இந்தியா இருந்து வருகிறது.இந்தியாவில் மருத்துவ சாதனங்கள் துறை இந்திய சுகாதாரத் துறையின் இன்றியமையாத ஒருங்கிணைந்த அங்கமாகும். குறிப்பாக குறைபாடுகளைத் தடுத்தல்,கண்டறிதல்,சிகிச்சை,மேலாண்மை போன்றவற்றை உள்ளடக்கிய மருத்துவ சாதனங்கள் துறை ஒரு பல்துறை அம்சங்கள் கொண்ட துறையாகும். மின் மருத்துவ உபகரணங்கள்,உள்வைப்புகள்,அறுவை சிகிச்சைக் கருவிகள போன்றவை மருத்துவ சாதனத் துறையின் பல பிரிவுகளில் சிலவாகும்


2024-25-ம் நிதியாண்டில், ஏப்ரல் 2024 முதல் டிசம்பர் 2024 வரை, அந்நிய நேரடி முதலீடு, மருந்துகள், மருத்துவ சாதனங்கள் இரண்டிலும் ரூ11,888 கோடியாக இருந்தது.மேலும்,2024-25 நிதியாண்டில் மருந்து துறை மேம்பாட்டுத் திட்டங்களுக்காக ரூ7,246.40 கோடி மதிப்புள்ள 13 அந்நிய நேரடி முதலீட்டு திட்டங்களுக்கு மருந்துகள் துறை ஒப்புதல் அளித்தது மத்திய அரசால் 2020-ல் தொடங்கப்பட்ட உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகைத் திட்டம்,உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பது,முதலீடுகளை ஈர்ப்பது, இறக்குமதியை நம்பியிருப்பதைக் குறைப்பது ஏற்றுமதியை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு முன்முயற்சியாகும்.தற்சார்பு இந்தியா, இந்தியாவில் உற்பத்தி செய்வோம் ஆகிய முன்முயற்சிகளுடன் இணைந்த இந்தத் திட்டம் உற்பத்தி செயல்திறனின் அடிப்படையில் நிதி சலுகைகளை வழங்குகிறது.அத்துடன் உலகளாவிய போட்டித்தன்மையை மேம்படுத்துகிறது


மருந்துகளைப் பொறுத்தவரை இத்திட்டம் இறக்குமதி சார்புநிலையைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மருந்துகளுக்கான உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகைத் திட்டம் திட்டம் 24 பிப்ரவரி 2021 அன்று மத்திய அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது ரூ15,000 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் 2022- 2023 நிதியாண்டு முதல் நிதியாண்டு 2027-28 வரையிலான காலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 55 விண்ணப்பதாரர்களுக்கு ஆறு வருட காலத்திற்கு மூன்று பிரிவுகளின் கீழ் அடையாளம் காணப்பட்ட தயாரிப்புகளை உற்பத்தி செய்ய நிதி ஊக்கத்தொகையை இத்திட்டம் வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ்,காப்புரிமை பெற்ற காப்புரிமை பெறாத மருந்துகள்,உயிரி மருந்துகள்,புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் போன்ற உயர் மதிப்பு மருந்து தயாரிப்புகள் தயாரிக்கப்படுகின்றன

மருத்துவ சாதனங்களுக்கான உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகைத் திட்டம் உயர்தர மருத்துவ உபகரணங்களின் உள்நாட்டு உற்பத்தியை ஆதரிப்பதற்கும் இறக்குமதியை நம்பியிருப்பதைக் குறைப்பதற்கும் தொடங்கப்பட்டது

Next Story
கதிர் தொகுப்பு
Trending News