மத்திய அரசு ஜவுளி அமைச்சகத்தின் புதிய முயற்சி:உருவான சிறப்பு தீ தடுப்பு உடைகள்!

மத்திய அரசு ஜவுளி அமைச்சகத்தின் முன்முயற்சியான தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கம் சிறப்பு தீ தடுப்பு பாதுகாப்பு உடைகளை உருவாக்குதல் என்ற புதுமையான திட்டத்திற்கு ஆதரவளித்துள்ளது. இந்த சிறப்பு தீ தடுப்பு உடைகள் பல்வேறு தொழில்துறையினருக்கு பயனுள்ளதாக அமையும்
இந்தியாவில் தீயணைப்பு உடைகளின் உற்பத்தி அதன் ஆரம்ப கட்டத்தில்தான் உள்ளது.ஜதற்போது, இந்தியாவில், சிறப்பு தீ தடுப்புப் பாதுகாப்பு உடைகள் பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகள்,அமெரிக்கா,சீனா ஆகியவற்றிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன இந்நிலையில் தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கமான என்டிடிஎம், அதன் தொழில்துறை பங்குதாரரான சிஸ்டம் 5எஸ் பிரைவேட் லிமிடெட்டுடன் இணைந்து இந்த உடை உருவாக்கம் தொடர்பான பணியில் ஈடுபட்டது
இந்திய சான்றளிக்கப்பட்ட அலுமினியமயமாக்கப்பட்ட இந்த உடையை அறிமுகப்படுத்தப்பட்டால் இதன் பயன்பாடு அதிவேகமாக உயரக்கூடும் சிஸ்டம் 5எஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடம் ஆண்டொன்றுக்கு 1000 உடைகள் தயாரிக்கும் திறன் உள்ளது
தீயணைப்பு வீரர்களுக்கான பாதுகாப்பு ஆடைகளுக்கான சோதனை முறைகளுக்கான தரநிலைப்படி, இது அமைந்திருக்கும் ஏற்கனவே சோதனை நோக்கங்களுக்காக இந்த உடை உற்பத்தி தொடங்கியுள்ளது சோதனை வெற்றிகரமாக முடிந்ததும் இது தேவையான அனைத்து செயல்திறன் தேவைகளையும் பூர்த்தி செய்வதை உறுதி செய்யும்