இது எங்கள் நிலம் வெளியேறுங்கள்: வேலூர் கிராம மக்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய வக்ஃப் வாரியம்!

By : Bharathi Latha
வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுக்கொல்லை கிராமத்தில் வீடுகள் கட்டி வசித்து வரும் 150 குடும்பங்களிடம் திடீரென இது எங்களுடைய சொந்த நிலம் இதில் தாங்கள் வீடு கட்டி இருக்கிறீர்கள் அதற்காக மாதாந்திர வாடகை கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது விரிஞ்சிபுரம் பகுதியில் அமைந்துள்ள பள்ளி வாசல் நிர்வாகம். இந்த நோட்டீஸ் கடந்த பிப்ரவரி 27-ம் தேதியன்றே அனுப்பப்பட்டிருக்கிறது. ஆனால், 4 தலைமுறைகளாக அதே பகுதியில் வசிப்பதால் காட்டுக்கொல்லை கிராம மக்கள் மசூதி தரப்பிலிருந்து அனுப்பப்பட்ட நோட்டீஸை தட்டிக் கழித்திருக்கின்றனர்.
இந்த நிலையில்தான் மசூதி தரப்பில் ஆக்கிரமிப்புகள் அப்புறப் படுத்தப்படும் என எச்சரித்து, 7 நாள்கள் கெடு கொடுக்கப்பட்டதால், காட்டுக்கொல்லை கிராம மக்கள் இந்த விவகாரம் குறித்து வெளி உலகத்திற்கு கொண்டு வந்து இருக்கிறார்கள். இருந்தாலும் தற்பொழுது தான் வகுப்பு வாரிய திருத்தச் சட்டம் மத்திய அரசின் சார்பில் கொண்டுவரப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் இது ஒரு பிரச்சனை பூதாகரமாக வெடிக்கத் தொடங்கியிருக்கிறது.
சம்பந்தப்பட்ட மசூதி பெயரில், பரம்பரை முத்தவல்லி எனக் குறிப்பிட்டு சையத் சதாம் என்பவர் தான் நோட்டீஸை அனுப்பி இருக்கிறார். இது தர்காவுக்குச் சொந்தமான வக்ஃப் வாரிய இடத்தில் தாங்கள் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்யும் வண்ணம் வீடு, கடை கட்டி குடியிருந்து வருகிறீர்கள். இது வக்ஃப் வாரிய சட்டத்துக்கெதிரான செயலாகும். மேலும், தாங்கள் வசித்து வரும் இடமானது மேற்கண்ட மசூதிக்கு பாத்தியப்பட்டதாகும். எனவே இந்த ஒரு பிரச்சனை தான் தற்பொழுது தமிழகத்தில் பரபரப்பாக பேச்சு பொருளாக மாறி இருக்கிறது.
