உலக அளவில் சிறப்பு அங்கீகாரத்தை பெற்ற பகவத் கீதை: பிரதமர் மோடி பெருமிதம்!

By : Sushmitha
யுனெஸ்கோவின் சர்வதேச நினைவு பதிவேடு உலகம் முழுவதும் உள்ள கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை அங்கீகரிக்கும் விதமாகவும் அவை தொடர்பான ஆவணங்களை அடையாளம் கண்டு அதனை பாதுகாப்பதற்கும் உருவாக்கப்பட்டது
அதன்படி ஒவ்வொரு ஆண்டும் கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய படைப்புகளுக்கு சிறப்பு அங்கீகாரம் இதன் மூலம் வழங்கப்பட்ட வந்தது அந்த வகையில் கடந்த ஆண்டு ராம் சரித்மானஸ் பஞ்சதந்திரம் சஹ்ருதயலோக-லோகனா ஆகிய மூன்று இந்திய இலக்கியப் படைகள் யுனெஸ்கோவின் உலக ஆசிரிய பசிபிக் பிராந்திய பிரதேசம் சேர்க்கப்பட்டன
இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டுக்கான யுனெஸ்கோவின் சர்வதேச நினைவு பதிவேட்டில் ஹிந்துக்களின் புனித நூலாக கருதப்படுகின்ற பகவத் கீதை மற்றும் பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரம் ஆகியவை சேர்க்கப்பட்டு சிறப்பு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது அது மட்டுமின்றி சர்வதேச அங்கீகாரம் இந்திய படைப்புகளின் எண்ணிக்கை தற்போது 14 ஆக உயர்ந்துள்ளது
இதற்கு பிரதமர் நரேந்திர மோடி உலகில் உள்ள அனைத்து இந்தியர்களுக்கு இது பெருமையான தருணம் யுனெஸ்கோவின் சர்வதேச நினைவு பதிவேட்டில் பகவத் கீதை மற்றும் நாட்டிய சாஸ்திரம் சேர்க்கப்பட்டுள்ளது நமது உயரிய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம் ஆகும் என பெருமிதம் கொண்டுள்ளார்
