காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதல்: பிரதமர் மோடி போட்ட உடனடி உத்தரவு!

By : Bharathi Latha
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 27 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 12 சுற்றுலாப் பயணிகள் படுகாயமடைந்துள்ளனர். பயங்கரவாதிகளின் இந்த கொடூரத் தாக்குதல் தொடர்பாக சவுதி அரேபியாவில் இருந்து பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தொடர்பு கொண்டு விவரங்களைக் கேட்டறிந்தார்.
காஷ்மீரில் உள்ள பாகல்காமில் பயங்கரவாத தாக்குதலில் 24 பேர் உயிரிழப்பு, 13 பேர் படுகாயம். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரடி ஆய்வு செய்வதற்கு காஷ்மீர் விரைந்துள்ளார். பயங்கரவாதிகளுக்கு கடும் தண்டனை உறுதி என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தொலைபேசியில் அழைத்து சம்பவம் குறித்து கேட்டறிந்தார். மேலும் காஷ்மீர் சென்று நிலைமையை ஆய்வு செய்யும்படி கூறியிருந்தார். இதை எடுத்து மத்திய அமைச்சர் ஜம்மு காஷ்மீருக்கு சென்று இருக்கிறார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுப்பதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது.
இது தொடர்பாக பிரதமர் எக்ஸ் வலைதள பக்கங்களில் கூறும்பொழுது, "காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவிக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும். இந்த கொடூர செயல்களுக்கு பின்னால் உள்ளவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். அவர்கள் தப்பிக்க முடியாது. இந்த மோசமான திட்டம் வெற்றி பெறாது. பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற தீர்மானம் அசைக்க முடியாதது. அது இன்னும் வலிமையாகி உள்ளது" என கூறியுள்ளார்.
