Kathir News
Begin typing your search above and press return to search.

காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதல்: பிரதமர் மோடி கொடுத்த உறுதிப்பாடு!

காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதல்: பிரதமர் மோடி கொடுத்த உறுதிப்பாடு!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  23 April 2025 10:01 PM IST

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் இன்று நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “இந்தக் கொடூர செயலின் பின்னணியில் உள்ளவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். அவர்கள் தப்ப முடியாது. அவர்களின் தீய திட்டம் ஒருபோதும் வெற்றி பெறாது. பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான நமது உறுதிப்பாடு அசைக்க முடியாதது, அது மேலும் வலுப்பெறும்" என்று திரு மோடி மேலும் கூறினார்.


சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது, "ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது.

இந்தக் கொடூர செயலின் பின்னணியில் உள்ளவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்... அவர்கள் தப்ப முடியாது. அவர்களின் தீய எண்ணம் ஒருபோதும் வெற்றி பெறாது. பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான நமது தீர்மானம் அசைக்க முடியாதது, அது மேலும் வலுவடையும்."

Next Story
கதிர் தொகுப்பு
Trending News