Kathir News
Begin typing your search above and press return to search.

ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல்: மத்திய அரசு உடனடி நிவாரண நடவடிக்கை!

ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல்: மத்திய அரசு உடனடி நிவாரண நடவடிக்கை!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  23 April 2025 10:04 PM IST

காஷ்மீரில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து, பாதிக்கப்பட்ட சுற்றுலாப் பயணிகளுக்கு உதவ மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு விரைவாக நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.உள்துறை அமைச்சருடன் தனிப்பட்ட முறையில் பேசிய அமைச்சர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பில் 24 மணி நேரமும் நிலைமையை கண்காணித்து வருகிறார். உடனடி நிவாரண நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ஸ்ரீநகரில் இருந்து தில்லிக்கு இரண்டு விமானங்களும் மும்பைக்கு இரண்டு விமானங்களும் என நான்கு சிறப்பு விமானங்களை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அங்கு பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய கூடுதல் விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.


மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு அனைத்து விமான நிறுவனங்களுடனும் அவசரக் கூட்டத்தை நடத்தியுள்ளார். கட்டணம் உயர்த்தப்படாமல் இருக்க அவர் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த முக்கியமான நேரத்தில் எந்தவொரு பயணிக்கும் சுமை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும் வழக்கமான கட்டண அளவை பராமரிக்கவும் விமான நிறுவனங்கள் அறிவுறுத்தப் பட்டுள்ளன.

மேலும், மாநில அரசுகள், உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி, இறந்த நபர்களின் உடல்களை அவரவர் சொந்த மாநிலங்களுக்கு எடுத்துச் செல்ல முழு ஒத்துழைப்பை வழங்குமாறு அனைத்து விமான நிறுவனங்களுக்கும் மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு உத்தரவிட்டுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News