மனிதநேயத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம்: பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர்!

By : Sushmitha
காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பல நாட்டுத் தலைவர்கள் இந்தியாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்த வருகின்றனர் இலங்கை அமெரிக்கா போன்ற நாட்டின் அதிபர்கள் பாகிஸ்தானின் இந்த பயங்கரவாத தாக்குதலை கண்டித்து வருகின்றனர்
இந்த நிலையில் ஈரான் அதிபர் பிரதமர் மோடியிடம் காஷ்மீரின் நிலை குறித்து தொலைபேசி மூலம் கேட்டறிந்தார் மேலும் காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலை கடுமையாக கண்டித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கலும் தெரிவித்தார்
அதுமட்டுமின்றி இது போன்ற பயங்கரவாத செயல்களுக்கு எந்த நியாயமும் இருக்க முடியாது மனிதநேயத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைந்து போராட்டத்தில் நிற்க வேண்டும் என்பதை இருநாட்டு தலைவர்களும் ஒப்புக்கொண்டு பேசியுள்ளனர்
முன்னதாக ஈரான் துறைமுகத்தில் இன்று நடந்த குண்டு வெடிப்பில் உயிர் இழந்தவர்களுக்கும் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார்
