மோடியை தவிர வேறு தலைவர் இருக்கிறாரா?சிறந்த தலைவர் பிரதமர் மோடி:இளையராஜா புகழாரம்!

By : Sushmitha
1988 இல் நான் முதல் முறையாக காசிக்கு சென்றிருந்தேன், அப்பொழுது தூய்மையற்ற நகரமாக காட்சியளித்தது காசி. ஆனால் தற்போது கங்கை புனிதமாக மாறி உள்ளது, இதை செய்தவர் பிரதமர் மோடி. நாட்டை உண்மையாக நேசிப்பவர்களால் மட்டுமே இது போன்ற பணியை செய்ய முடியும். நாட்டின் சிறந்த பிரதமராக மவுண்ட்பேட்டன் காலம் முதல் பார்த்தால் மோடியே சிறந்த பிரதமர் என இளையராஜா கூறியுள்ளார்
தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி கொடுத்த இளையராஜா இந்தியாவை இதுவரை ஆட்சி செய்த அனைத்து பிரதமர்களின் பெயர்களையும் எழுதுங்கள் மவுன்ட்பேட்டன் ஆட்சி காலத்தில் இருந்து அவர்கள் தங்களுடைய ஆட்சியில் இந்தியாவிற்கு என்ன செய்தார்கள் என்று பாருங்கள்
அதே சமயத்தில் பிரதமர் மோடிக்காகவும் ஒரு பட்டியலை தயார் செய்யுங்கள் அப்போது வித்தியாசத்தை நீங்களே காண்பீர்கள் 1988 இல் நான் முதல் முறையாக காசிக்கு சென்றிருந்தேன், அப்பொழுது தூய்மையற்ற நகரமாக காட்சியளித்தது காசி. ஆனால் தற்போது கங்கை புனிதமாக மாறி உள்ளது, இதை செய்தவர் பிரதமர் மோடி. நாட்டை உண்மையாக நேசிப்பவர்களால் மட்டுமே இது போன்ற பணியை செய்ய முடியும்.
நான் உங்களிடம் மற்றுமொரு கேள்வியையும் கேட்கிறேன் ஒருவேளை நமக்கு மோடி தேவை இல்லை என்றால் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வேறு ஒரு தலைவரின் பெயரை நீங்களே சொல்லுங்கள் யாரேனும் அப்படி இருக்கிறார்களா என்று பிரதமரின் ஆட்சி குறித்து புகழ்ந்து பேசியுள்ளார்
