பிரதமரின் உஜ்வாலா திட்டம்: மோடி அரசின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி!

By : Bharathi Latha
பிரதமரின் உஜ்வாலா திட்டம் குறிப்பிடத்தக்க வகையில் 2025, மே 1 அன்று ஒன்பது ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இது அனைவருக்கும் தூய்மையான சமையல் எரிவாயுவை உறுதி செய்வதற்கான இந்தியாவின் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. மே 2016-ல் தொடங்கப்பட்ட பிரதமரின் உஜ்வாலா திட்டம் , ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு வைப்புத்தொகை இல்லாத சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்குவதையும், விறகு, வறட்டி போன்ற சமையலுக்கான பாரம்பரிய எரிபொருட்களை மாற்றுவதன் மூலம் சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மகளிருக்கு அதிகாரமளிப்பதை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டது.
இந்தத் திட்டம் கடந்த ஒன்பது ஆண்டுகளில், நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளது. 01.03.2025 நிலவரப்படி, இந்தியா முழுவதும் 10.33 கோடி பிரதமரின் உஜ்வாலா திட்ட இணைப்புகள் உள்ளன. சமையல் எரிவாயுவின் நீடித்த பயன்பாட்டை பிரதிபலிக்கும் விதமாக, 01.04.2022 அன்று வெளியிடப்பட்ட தகவலின்படி 8.99 கோடி இணைப்புகளில், 8.34 கோடி பயனாளிகள் ஏப்ரல் 2022 மற்றும் மார்ச் 2024-க்கு இடையே, கடந்த இரண்டு நிதியாண்டுகளில் குறைந்தது ஒரு சிலிண்டர் நிரப்புதலையாவது பெற்றுள்ளனர்.
உஜ்வாலா 2.0-ன் கீழ், புலம்பெயர்ந்த குடும்பங்களுக்கு ஒரு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. முகவரிச் சான்று மற்றும் குடும்ப அட்டை தேவைப்படுவதற்குப் பதிலாக சுய அறிவிப்பு மூலம் புதிய சமையல் எரிவாயு இணைப்பைப் பெற அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
