கிழக்கு காஷ்மீரில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகள்:என்.ஐ.ஏ வட்டாரங்கள் தெரிவிக்கும் தகவல்!

By : Sushmitha
காஷ்மீரில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் இன்னும் தெற்கு காஷ்மீரில் பதுங்கி இருப்பதாக என்ஐஏ வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது
கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாதிகளின் தாக்குதலால் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தது இந்திய நாட்டையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியது இதனைத் தொடர்ந்து மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அதன்படி உடனடியாக பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேறும் உத்தரவையும் மத்திய அரசு பிறப்பித்தது மேலும் சிந்து நதி ஒப்பந்தத்தையும் நிறுத்தி வைத்துள்ளது
இதற்கிடையில் பாகிஸ்தான் தொடர்ச்சியாக அத்துமீறி தாக்குதல்களை நடத்தி வருவதாகவும் அதற்கான பதிலடிகளை இந்திய ராணுவம் கொடுத்து வருவதாகவும் செய்திகள் வெளியானது இந்த நிலையில் காஷ்மீரில் தாக்குதல் நடத்தியவர்கள் இன்னமும் தெற்கு காஷ்மீரில் பதுங்கி இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன
அதுமட்டுமின்றி நீண்ட நாட்களுக்கு வனப்பகுதியில் அங்கேயே பதுங்கி மறைந்து இருந்து செயல்படும் வகையில் உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களையும் கொண்டு வந்துள்ளதாகவும் அவர்கள் யாரையும் நம்பாமல் தனித்து செயல்படுவதாகவும் என்ஐஏ வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது
