பாகிஸ்தான்-இந்தியா இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தால் பெரும் பாதிப்பை சந்திக்க போகும் பாகிஸ்தான் பொருளாதாரம்:மூடிஸ் அறிவிப்பு!

By : Sushmitha
காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலால் இந்தியா பாகிஸ்தானுக்கு எதிரான பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அதுமட்டுமின்றி இந்திய ராணுவத்திற்கும் முழு சுதந்திரத்தை பிரதமர் மோடி வழங்கி இருக்கிறார் இதனால் இந்திய ராணுவம் இந்நேரத்திலும் அதிரடி நடவடிக்கையை எடுக்கலாம் என கூறப்படுகிறது
ஆனால் காஷ்மீரில் நடந்த தாக்குதல் இருக்கு முன்பாகவே பாகிஸ்தானின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையை சந்தித்திருந்தது இந்த நிலையில் இந்தியாவுடன் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலை காரணமாக பாகிஸ்தானுக்கு அதிக இராணுவ செலவினங்கள் ஏற்படும் அதனை எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடிகளும் அந்நாடு சிக்கி உள்ளது
இதனால் இந்தியாவுடன் பதற்றம் அதிகரிப்பதால் பாகிஸ்தானின் பொருளாதார வளர்ச்சி பாதிப்படையும் என உலகளாவிய மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் தெரிவித்துள்ளது அதே நேரத்தில் இந்தியாவின் பொருளாதாரம் வலுவாக இருப்பதாலும் பாகிஸ்தானுடன் கொண்டுள்ள பொருளாதார உறவுகள் சிறிய அளவில் இருப்பதாலும் இந்தியா பெரிய பாதிப்பை சந்திக்காதது என்றும் மூடிஸ் தெரிவித்துள்ளது
