தனி நாடு வேண்டும் என்று பலுச் போராளிக்குழு கோரிக்கை: பதட்டத்தில் பாகிஸ்தான்!

By : Bharathi Latha
தனி நாடு வேண்டும் என்று போராடி வரும் பலுச் விடுதலை ராணுவத்தினர், தற்போது பாகிஸ்தான் ராணுவத்தின் மீது அதிரடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். பாகிஸ்தானில் அதிக நிலப்பரப்பு கொண்ட மாநிலமாக இருப்பது பலுசிஸ்தான். இங்கு எண்ணெய் வளம் அதிகம்.இங்கு பலுாச் இன மக்கள் பெரும்பான்மையாக இருக்கின்றனர். ஆனால், அவர்கள் மீது ஓரவஞ்சனையாக நடந்து கொள்ளும் பாகிஸ்தான் மத்திய அரசு.
பலுாச் இன மக்களை அடக்கி, அச்சுறுத்தி ஆண்டு வருகிறது.இதனால், பலுசிஸ்தான் என்ற பெயரில் தங்களுக்கு தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அங்கு போராளிக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.
இவற்றில் பலுச் விடுதலை ராணுவம் என்ற போராளிக்குழு முக்கியமானது. ராணுவம் போன்ற அனைத்து வசதிகளுடன் செயல்படும் இந்த அமைப்பு, அவ்வப்போது பாகிஸ்தான் ராணுவம் மீதும், அரசு அமைப்புகள், நிறுவனங்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த அமைப்பை சேர்ந்த போராளிகள், கலாட் மாவட்டத்தில் அதிரடி தாக்குதல் நடத்தினர். குவெட்டா - கராச்சி தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
