Kathir News
Begin typing your search above and press return to search.

பஹல்காம் தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த இந்திய ராணுவம்!

பஹல்காம் தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த இந்திய ராணுவம்!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  9 May 2025 11:28 PM IST

நாடு முக்கியமான காலகட்டத்தில் பயணித்து வருவதால், அனைத்து துறைகள் மற்றும் அமைச்சகங்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதுடன், விழிப்புடன் இருக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில், மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் செயலாளர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.


கேபினட் செயலர், பிரதமர் அலுவலக மூத்த அதிகாரிகள், பாதுகாப்பு, உள்துறை, வெளியுறவுத்துறை, தகவல் மற்றும் ஒளிபரப்பு, மின்சாரம், சுகாதாரம் மற்றும் தொலை தொடர்புத்துறை செயலாளர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், தற்போதுள்ள சூழ்நிலையில் அமைச்சகங்களின் செயல்பாடுகள் மற்றும் தயார் நிலை குறித்து பிரதமர் ஆய்வு செய்தார்.

சிவில் பாதுகாப்பு வழிமுறைகளை வலுப்படுத்துதல், தவறான மற்றும் போலி செய்திகளை பரவுவதை தடுப்பதற்கான முயற்சி செய்வது குறித்தும் பிரதமர் ஆலோசனை நடத்தினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News