பிரதமர் மோடி தலைமையிலான உயர்மட்ட குழு கூட்டம்: முக்கிய முடிவை எடுத்த மத்திய அரசு!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று புதுதில்லியில், லோக் கல்யாண் மார்க் இல்லத்தில் உயர்நிலைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தளபதி ஜெனரல் அனில் சவுகான், ஆயுதப்படைகளின் தலைவர்கள், மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 7, லோக் கல்யாண் மார்க் இல்லத்தில் உயர்நிலைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தளபதி ஜெனரல் அனில் சவுகான், ஆயுதப்படைத் தலைவர்கள், மூத்த அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்".
பாகிஸ்தான் உடனான போர் பதற்றம் நீடித்து வரும் சூழ்நிலையில் இந்த ஒரு சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்தான் கருதப்படுகிறது. குறிப்பாக தொடர்ச்சியான வண்ணம் பாகிஸ்தான இந்தியாவின் மீது எந்த வகையான தாக்குதலை நடத்தலாம் என்று பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் சூழ்நிலையில் அவற்றை முறியடிப்பதற்கான நடவடிக்கைகளை மோடி அரசு தொடர்ச்சியான வண்ணம் எடுத்து வருகிறது.