எந்த அணுகுண்டு மிரட்டலையும் பொறுத்துக் கொள்ள மாட்டோம்:ஆதம்பூர் விமானப்படைத் தளத்தில் பிரதமர் மோடி!

By : Sushmitha
பிரதமர் நரேந்திர மோடி இன்று மே 13 எல்லையோர மாநிலமான பஞ்சாபில் உள்ள ஆதம் போர் விமானப் படைத்தளத்தில் வீரர்களை சந்தித்து உரையாடினார்
அந்த சந்திப்பில் எஸ் 400 வான் பாதுகாப்பு கவசத்தின் முன் நின்று பேசிய பிரதமர் உங்களை பார்த்து வணக்கம் செலுத்த வந்துள்ளேன் உங்களைப் பார்ப்பதில் எனக்கு பெருமையாக உள்ளது இந்த ஒட்டுமொத்த உலகமே இந்திய விமானப்படையின் வீரத்தை பார்த்தது பாகிஸ்தான் தாக்குதலை நாம் வெற்றிகரமாக கையாண்டோம் ராணுவ வீரர்களை உலகமே பாராட்டுகிறது இந்திய பெண்களுக்கான நீதியை நிலைநாட்டி உள்ளீர்கள் இந்த உலகம் முழுவதும் ராணுவத்தினர் நிகழ்த்திய ஆபரேஷன் சிந்தூர் எதிரொலித்தது
முதலில் இந்தியாவில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல் நடத்தினால் நமது வழியில் பதிலடி இருக்கும் இரண்டாவதாக எந்த அணுகுண்டு மிரட்டலையும் பொறுத்துக் கொள்ள மாட்டோம் மூன்றாவதாக பயங்கரவாத ஆதரவு அரசு மற்றும் பயங்கரவாதத்தின் மூளையாக செயல்படுபவர்களை பிரித்துப் பார்க்க மாட்டோம் இந்தியாவின் பிரிவு கொள்கையை உறுதியை உலகம் ஏற்றுக் கொண்டுள்ளது என்று உரையாற்றி உள்ளார்
