பாகிஸ்தானுக்கு உதவிய துருக்கி: இந்திய ஆப்பிள் வியாபாரிகள் எடுத்த அதிரடி முடிவு!நஷ்டமடையும் துருக்கி!

By : Sushmitha
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலால் இந்தியா பாகிஸ்தான் இடையே கடந்த சில நாட்களில் மோதல்கள் நடைபெற்றது அதில் பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்துவதற்கு துருக்கி டிரோன்களை பயன்படுத்தியதாக செய்திகள் வெளியானது
இந்த நிலையில் பாகிஸ்தானிற்கு ட்ரோன் மற்றும் ஆயுதங்களை வழங்கிய துருக்கிக்கு பதிலடி கொடுக்க நினைத்த இந்திய வியாபாரிகள் துருக்கிய ஆப்பிளை புறக்கணித்துள்ளனர் இதனால் துருக்கிக்கு கிட்டத்தட்ட ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என கூறப்படுகிறது அதாவது புனேவில் உள்ள வேளாண் விளைபொருள் சந்தை குழுவில் உள்ள ஆப்பிள் வியாபாரியான சுயோக் ஜெண்டே துருக்கியிலிருந்து ஆப்பிள்கள் வாங்குவதை நிறுத்துவதாக கூறியுள்ளார்
மேலும் துருக்கிக்கு பதிலாக இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், ஈரான் மற்றும் பிற பிராந்தியங்களில் இருந்து ஆப்பிள்களை வாங்க உள்ளதாகவும் நாங்கள் எடுத்துள்ள இந்த முடிவு தேசபக்தி சார்ந்தது துருக்கியில் பூகம்பம் ஏற்பட்ட பொழுது அவர்களுக்கு முதன்முதலாக உதவிய நாடு இந்தியா ஆனால் அவர்கள் பாகிஸ்தானை ஆதரித்து ஆயுதங்களை அனுப்பி உள்ளனர் என்று கூறியுள்ளார்
