சர்வதேச நாணய நிதியம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்:குஜராத் புஜ் விமானப்படைத் தளத்தில் ராஜ்நாத் சிங்!

இந்தியா பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றம் தற்போது தணிந்து போர் நிறுத்தம் உள்ளநிலையிலும் இந்தியா சிந்து நதி நீரின் ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது
இந்த நிலையில் கடந்த வாரம் பாகிஸ்தான் ராணுவத்தால் பெரிதும் குறிவைக்கப்பட்ட ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த தலங்களில் ஒன்றான குஜராத்தின் புஜ் விமானப்படை தளத்திற்கு சென்ற பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விமானப்படை வீரர்களுடன் உரையாற்றினார்
அதாவது ஆபரேஷன் சிந்தூர் இன்னமும் முடிவு பெறவில்லை இது வெறும் டிரைலர் தான் முழு படம் பின்னர் தான் வெளிப்படும் தற்போது ஏற்பட்டுள்ள போர் நிறுத்தம் பாகிஸ்தானுக்கு சோதனை காலம் போன்றது மீண்டும் பாகிஸ்தான் மோசமான நடத்தைக்கு திரும்பினால் இந்தியா தகுந்த பதிலடி கொடுக்கும் என்று கூறினார்
மேலும் பாகிஸ்தானுக்கு கொடுக்கப்படும் எந்த ஒரு நிதி உதவியும் பயங்கரவாதத்திற்கு உதவும் அதனால் சர்வதேச நாணய நிதியும் பாகிஸ்தானுக்கு கொடுக்கப்படும் நிதி குறித்து பரிசீலினை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் முன்னதாக சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானிற்காக விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் 1.023 பில்லியன் டாலரை இரண்டாவது தவணையாக வழங்கியுள்ளது என்பதையும் குறிப்பிட்டு இருந்தார்