ஆபரேசன் சிந்தூருக்குப் பிறகு உயரும் பாதுகாப்பு பட்ஜெட்:வெளியான அறிக்கை!

ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு இந்தியாவின் பாதுகாப்பு பட்ஜெட் ரூ.50,000 கோடி உயரக்கூடும், இந்த அதிகரிப்பு துணை பட்ஜெட் மூலம் செலுத்தப்படலாம் என்று செய்திகள் வெளியாகி உள்ளது
2025-26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாதுகாப்புக்காக ரூ.6.81 லட்சம் கோடியை ஒதுக்கியிருந்தார் இது 2024-25 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட ரூ.6.22 லட்சம் கோடியிலிருந்து 9.2 சதவீதம் அதிகமாகும் நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரில் அங்கீகரிக்கப்பட வாய்ப்புள்ள கூடுதல் நிதி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் பிற முக்கிய உபகரணங்களை வாங்குவதற்கு உதவும் என்று அறிக்கை வெளியானது
2014 ஆம் ஆண்டு பாஜக அரசின் முதல் ஆண்டில், பாதுகாப்பு அமைச்சகம் ரூ.2.29 லட்சம் கோடியைப் பெற்றது ஆனால் தற்போதைய ஒதுக்கீடு அனைத்து அமைச்சகங்களிலும் மிக உயர்ந்தது மட்டுமல்லாமல், மொத்த மத்திய பட்ஜெட்டில் 13 சதவீதமாகும் அதாவது ஏப்ரல் 22 பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து அதிகரித்த பாதுகாப்பு பதட்டங்கள் மற்றும் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீர் முழுவதும் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய இராணுவம் ஆபரேஷன் சிந்தூர் மூலம் கொடுத்த பதிலடி காரணமாக மத்தியில் இந்த நிதி ஒதுக்கீடு அதிகமாகும் என்ற பேச்சு எழுந்துள்ளது