மதுபோதையில் சிகிச்சை அளித்த டாக்டர்: அரசு மருத்துவமனையில் நிகழ்ந்த பரபரப்பு!

தூத்துக்குடியில் அமைந்திருக்கும் அரசு மருத்துவக்கல்லூரிமருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் உள்நோயாளிகளாகவும் புற நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று காலை 6 மணியளவில் ஆண்கள் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெறுவதற்காக நோயாளிகள் காத்து இருந்தனர்.
சுமார் 5.30 மணிக்கு பொது மருத்துவ பிரிவை சேர்த்த டாக்டர் கண்ணன் என்பவர் அங்கு வந்தார். அவர் புறநோயாளிகள் பிரிவுக்கு செல்லும்போது. அந்த வழியில்இருந்த இரில் கேட்டை கையால் அடித்துக் கொண்டே இருந்துள்ளார். பின்னர் புறநோயாளிகள் பிரிவுக்கு சென்று சிகிச்சை அளித்து உள்ளார். அவர் சுமார் ஒன்றரை மணி நேரமாக நோயாளிகளுக்கு சிச்சை அளித்து உள்ளார். இந்த நிலையில் லூதர் நகரை சேர்ந்த சரோஜர் தனது பக்கத்து விட்டை சேர்ந்த முதியவர் ஒருவருக்கு சிகிச்சை பெறுவதற்காக அங்கு காத்திருந்தார்.
அவர் டாக்டர் குடிபோதையில் இருப்பதை பார்த்து தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து உள்ளார். தொடர்ந்து ஆஸ்பத்திரியில் இருந்த பிற டாக்டர்களிடமும் புகார் தெரிவித்தார். அதே தேரத்தில் வீடியோவும் வெளியாகி உள்ளது. இதனால் அங்கு முழு பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.