Kathir News
Begin typing your search above and press return to search.

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி: புதுவைப் பல்கலைக்கழகத்தில் உற்சாகத்துடன் நடந்த பெரும் தேசபக்திப் பேரணி!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி: புதுவைப் பல்கலைக்கழகத்தில் உற்சாகத்துடன் நடந்த பெரும் தேசபக்திப் பேரணி!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  17 May 2025 11:17 PM IST

புதுவைப் பல்கலைக்கழகத்தில், இந்திய ஆயுதப்படைகளின் வெற்றிகரமான நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூர் வெற்றியைக் கௌரவிக்கும் வகையில், மிகுந்த உற்சாகத்துடன் ஒரு பெரும் தேசபக்திப் பேரணி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினர்களையும்முக்கிய பிரமுகர்களையும் துணை வேந்தர் பேராசிரியர் ப. பிரகாஷ் பாபு வரவேற்று, உரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி துணை நிலை ஆளுநரும் புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் தலைமை ரெக்டருமான திரு கே. கைலாஷ்நாதன் கலந்து கொண்டு பேரணியை துவக்கிவைத்தார். இதில் புதுச்சேரி அரசின் உள்துறை மற்றும் கல்வி அமைச்சர் திரு ஆ. நமச்சிவாயம், காலாபட்டு சட்டமன்ற உறுப்பினர் பி.எம்.எல். கல்யாணசுந்தரம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.


இந்தப் பேரணியில், புதுச்சேரி பல்கலைக்கழகம், அதன் உறுப்புக் கல்லுரியான சமுதாய கல்லூரி மற்றும் இணைப்பு பெற்ற கல்லூரிகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இதில், என்சிசி (NCC), என்எஸ்எஸ் (NSS) தன்னார்வலர்களும் அடங்குவர். மாணவர்கள் தேசியக் கொடிகள் மற்றும் தேசபக்திப் பதாகைகளை ஏந்திச் சென்று, ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை உறுதிப்படுத்திய இந்திய வீரர்களின் வீரத்திற்கும் தியாகத்திற்கும் தங்கள் நன்றியையும், ஆதரவையும், ஒருமைப்பாட்டையும் வெளிப்படுத்தி தேசபக்தி முழக்கங்களை எழுப்பினர்.

நமது இந்திய ஆயுதப்படைகளின் ஆபரேஷன் சிந்தூர் செயல்பாட்டின் வெற்றியைக் கௌரவிக்கும் வகையிலும், பல்கலைக்கழக சமூகத்தின் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தவும், புதுச்சேரி பல்கலைக்கழகம் மேற்கொள்ளும் இத்தகைய முயற்சிகளை, துணை நிலை ஆளுநர் திரு கே. கைலாஷ்நாதன் பாராட்டினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News