Kathir News
Begin typing your search above and press return to search.

ஹைதராபாத்தில் ஏற்பட்ட தீ விபத்து: ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த பிரதமர் மோடி!

ஹைதராபாத்தில் ஏற்பட்ட தீ விபத்து: ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த பிரதமர் மோடி!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  18 May 2025 10:11 PM IST

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இறந்தவர்களின் வாரிசுதாரர்களுக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ₹ 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ₹ 50,000-மும் கருணைத் தொகையை பிரதமர் அறிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டிருப்பதாவது: "தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கும் இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்.


மரணமடைந்த ஒவ்வொருவரின் வாரிசுதாரர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ₹2 லட்சம் கருணைத் தொகை வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ₹50,000 வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News