ஆபரேஷன் சிந்தூர்: இந்திய ராணுவம் வெளியிட்ட வீடியோ வைரல்!

By : Bharathi Latha
ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான நடவடிக்கை குறித்து இந்திய ராணுவம் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில், பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் ' ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது நம் ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இதன் காரணமாக பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனிடையே, ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், இந்திய ராணுவத்தின் மேற்கு பிராந்தியப் பிரிவு, ஆப்பரேஷன் சிந்தூர் தொடர்பாக புது வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளது.'திட்டமிடல், பயிற்சி, மற்றும் செயல்படுத்துதல், நீதி நிலைநாடப்பட்டது' என்ற தலைப்பில் அந்த வீடியோ வெளியாகி உள்ளது.
