ஆபரேஷன் சிந்தூர்: சேதமடைந்த பாகிஸ்தான் விமானப்படை தளங்கள். அதிரடி காட்டிய இந்தியா!

By : Bharathi Latha
இந்தியாவின் அதிரடி தாக்குதலில் பாகிஸ்தானின் விமானப்படை தளங்கள் சேதமடைந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.இந்தியாவின் தாக்குதலால் பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்கள் பாதிக்கப்பட்டு இருப்பது செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் உறுதியாகி உள்ளன.கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெற்ற பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக "ஆபரேஷன் சிந்தூர்" என்ற பெயரில், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறி வைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது. இதனை தொடர்ந்து இருநாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவியது.
ஆனால் இந்தியாவின் அனைத்து தாக்குதல்களையும் முறியடித்ததாகவும், இந்தியாவின் பாதுகாப்பு கவசமான எஸ்-400-ஐ தாங்கள் தாக்கி விட்டோம் என பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் தங்களுக்கு இந்த தாக்குதல் மூலம் பாதிப்பு இல்லை என பாகிஸ்தான் தொடர்ந்து கூறி வந்தது. இதனையடுத்து இந்தியாவின் பாதுகாப்பு கவசமான எஸ்-400 பாதிக்கப்படவில்லை என பாதுகாப்பு அதிகாரிகள் விளக்கமளித்தனர்.
மேலும் இந்தியா நடத்திய தாக்குதலில், பாகிஸ்தானில் உள்ள சுமார் 13 விமானப்படை தளங்கள் பாதிக்கப்பட்டு இருப்பது தொடர்பான செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் உறுதியாகி உள்ளன. குறிப்பாக, பாகிஸ்தானின் சர்கோடா விமானப்படை தளத்தில் இரண்டு விமான ஓடுபாதையை இந்தியா அழித்துள்ளது. குறிப்பாக பாகிஸ்தானின் ரபிகியூ, முரித், சக்லாலா, ரஹீம் யார் கான், சுக்கூர், சுனியான் ராணுவ தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. பஸ்ரூர் ரேடார் தளம் மற்றும் சியால்கோட் விமான தளம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், அந்த தளங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது.
இதே போன்று, ரஹிம் யார்கான் விமானப்படை தளத்தின் ஓடுபாதையை இந்தியா தாக்கியதில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.பஸ்ரூர் விமானப்படை தளத்தில் உள்ள வான் பாதுகாப்பு ரேடார் அமைப்பையும் இந்தியா துவம்சம் செய்துள்ளது. இதே போன்று, ஜகோபாபாத், சுக்குர், போலாரி போஸ் உள்ளிட்ட விமானப்படை தளங்களையும் இந்தியா தாக்கியது. நூர் கான் என்ற இடத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையை இந்தியா தாக்கிய பிறகே, பாகிஸ்தான் போர் நிறுத்திற்க்கு முன்வந்ததும் தெரியவந்துள்ளது.
